காங்கிரஸ் ஆட்சியில் தான் ராமர் கோவில் கட்டப்படும் - உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் பேச்சு
பதிவு : ஜனவரி 18, 2019, 11:17 PM
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார். உத்தரகாண்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வினர் எப்போதும் மற்றவர்களின் மாண்பை குலைப்பார்கள் என்றார் .. மாண்பை சிதைப்பவர்கள் எப்படி, ராமரின் பக்தராக இருக்க முடியும் என்றும் அவர்  கேள்வி எழுப்பினார்.  காங்கிரஸ் கட்சியினர், அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர்கள் என்றும் அவர் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.