நாடாளுமன்ற தேர்தல் : மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, தலைநகர் டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் : மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம்
x
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, தலைநகர் டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியுள்ளது. 2 நாள் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தேர்தல் அட்டவணை தயாரித்தல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாளை, சனிக்கிழமையும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

Next Story

மேலும் செய்திகள்