ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஆர்டர்
பதிவு : ஜனவரி 06, 2019, 10:02 PM
நிர்மலா சீதாராமன் பொய் சொல்வதாக ராகுல் குற்றச்சாட்டு
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு  ராணுவ தளவாடங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் பொய் சொல்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளதுடன் இதற்கான ஆவணங்களை மக்களவையில் நாளை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு பொய்யை மறைப்பதற்காக பல பொய்களை பாஜக அரசு சொல்கிறது என்றும் தனது ட்விட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி 

ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறவில்லை என்றும், ராகுல்காந்தி அறிக்கையை முழுமையாக படிக்காமல் நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்றும் தனது டுவிட்டர் பதிவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில்,  2014-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்த அனுமதி பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்தும் ராகுல் பதவி விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

20 டன் டீ தூளுடன் பொன்னேரியில் லாரி பிடிபட்டது

1 views

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசாரம்

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

1 views

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தொங்கியபடி இழுத்துச்செல்லப்பட்டார்

6 views

தி.மு.க தேர்தல் அறிக்கை

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

2 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது.

19 views

போலீசாரிடம் சிக்கினார் ரவுடி பினு

பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.