5,000 கிலோ கிச்சடி தயாரித்து பாஜக சாதனை

தலித் வாக்குகளை கவர வித்தியாச முயற்சி
5,000 கிலோ கிச்சடி தயாரித்து பாஜக சாதனை
x
புதுடெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளும்  பேரணிக்காக 5 ஆயிரம் கிலோ கிச்சடி தயாரித்து பாஜக சாதனை செய்துள்ளது. ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் 'பீம் மகாசங்கம் விஜய் சங்கல்ப் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கிச்சடிக்கான அனைத்து பொருட்களையும் தலித் மக்களின் வீடுகளில் இருந்து திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி தலித் மக்கள் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்களுடன் நெருக்கம் காட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ள பாஜக  தலைவர்கள் இதற்காக 20 அடி சுற்றளவும் 6 அடி உயரமும் கொண்ட பாத்திரங்களை தயாரித்தோம் என்று கூறியதுடன் இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனையாக பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டனர். இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டில் சர்வதேச இந்திய உணவு திருவிழாவுக்காக 918 புள்ளி 
8 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டதுதான் சாதனையாக இருந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்