நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கிடையாது - அருண் ஜெட்லி தகவல்

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கிடையாது - அருண் ஜெட்லி தகவல்
x
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என தீர்ப்பளித்தது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க முடியாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை நீதித்துறை நடத்தி இருப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்