கும்பமேளாவுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் - பிரதமர் நரேந்திர மோடி திறப்பு

உத்தரபிரதேசத்தில் புதிய விமான நிலைய வளாகம் மற்றும் கும்பமேளாவுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
கும்பமேளாவுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் - பிரதமர் நரேந்திர மோடி திறப்பு
x
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தும், பல திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  புதிய விமான முனையம் ஒரு சாதனையாக, ஓராண்டு காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார். அர்த் - கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள்அக்ஷய்வாத்தையும்  பார்வையிட முடியும் என்நு தெரிவித்த பிரதமர், கங்கை நதி தூய்மையாக ஓடுவதை உறுதி செய்ய தேவையான பணிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர்  மோடி தெரிவித்தார்.  "புதிய இந்தியா" பாரம்பரியத்தையும் நவீனமயத்தையும் எவ்வாறு  ஒருங்கிணைக்கிறது என்பதை பிரதிபலிப்பதாக அர்த்-கும்பமேளா அமையும் என்றும்  பிரதமர் தெரிவித்தார். சில சக்திகள் தங்களை அனைத்து அமைப்புக்கும் மேலானவர்கள் கருதிக் கொண்டு இருப்பதாக தெரிவித்த மோடி, நாட்டின் நீதித்துறையின் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுத்து வரும் சில சக்திகளிடம் நாடு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்