பெய்ட்டி புயல் : சமாளிக்க ஏற்பாடுகள் தீவிரம் - சந்திரபாபு நாயுடு நடவடிக்கை

வங்கக் கடலில் உருவாகி உள்ள பெய்ட்டி புயல், ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க உள்ள நிலையில் ஓங்கோல் காக்கிநாடா ஆகிய மாவட்டங்களில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெய்ட்டி புயல் : சமாளிக்க ஏற்பாடுகள் தீவிரம் - சந்திரபாபு நாயுடு நடவடிக்கை
x
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்  பேரில் புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும், இடங்களில், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவை சேர்ந்த 140 பேர், அவசர காலத்திற்கு உதவும் வகையில் தயார் நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அழைத்து சென்ற அதிகாரிகள், முகாம்களில் தங்க வைத்துள்ளனர். குடிநீர் நிரப்பப்பட்ட டேங்கர்கள், அரிசி மற்றும் உணவு பொருட்கள்,மருந்துகள் ஆகியவற்றை இருப்பு வைக்கவும், ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்