சத்தீஷ்கர் முதல்வர் தேர்வு ஒத்திவைப்பு - டிச. 17 ல் புதிய முதல்வர் பதவியேற்பு

சத்தீஷ்கர் முதலமைச்சர் பதவியை பிடிக்க, அம் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளதால் தேர்ந்தெடுக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
சத்தீஷ்கர் முதல்வர் தேர்வு ஒத்திவைப்பு - டிச. 17 ல் புதிய முதல்வர் பதவியேற்பு
x
முதலமைச்சர் பதவிக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல், எதிர்க்கட்சி தலைவராக இருந்த டி.எஸ். சிங்தேவ், முன்னாள் மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்த், சத்தீஷ்கர் மாநில "எம்பி" தாம்ரத்வஜ் சாகு ஆகியோர் இடையே போட்டி உருவாகி உள்ளது. எனவே, நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மீண்டும் கூடி, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதனிடையே, சத்தீஷ்கர் புதிய முதலமைச்சர் , வருகிற 17 ம் தேதி பதவியேற்பார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்