நூதனமான முறையில் மதுபானங்களை கடத்தும் கும்பல்

புதுச்சேரியில் நூதனமான முறையில் மதுபானங்களை கடத்தும் கும்பல் அதிகரித்து வரும் நிலையில் மதுபான குடோன்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நூதனமான முறையில் மதுபானங்களை கடத்தும் கும்பல்
x
புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தின் எல்லையாக உள்ள தென்பெண்ணையாறு வழியாக மதுபானங்கள கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கி அதை மணல் லாரிகள், காய்கறி மூட்டைகள், ஆம்புலன்ஸ் போன்றவற்றின் மூலம் கடத்தும் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு 13 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரத்து 100 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். புதுச்சேரியில் உள்ள மதுபான ஆலைகளில் சோதனை நடத்தி வரும் அவர்கள், இதற்காக தனிக் குழுக்களை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் கடத்தல்காரர்களுக்கு அபராதம் மட்டுமே வசூலிப்பதை விட தண்டனைகளை கடுமையாக்கினால் குற்றங்கள் குறையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்