ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் - காங்கிரஸ்

ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளது.
ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் - காங்கிரஸ்
x
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பா.ஜ.க.வோ பிரதமரோக மகிழ்ச்சி அடையத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தான் சரியானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இதேபோல, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், தனக்கு சரியானது எது என கருதியதோ அதையே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றும், ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புவதாகவும் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சீராய்வு மனுதாக்கல் செய்வது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என மனுதாரர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூசன் தெரிவித்துள்ளார். 
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காகவே, காங்கிரஸ் கட்சி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். இதனிடை​யே, உச்சநீதிமன்ற தீர்ப்பை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி வரவேற்றுள்ளார். 

ரஃபேல் ஒப்பந்த தீர்ப்பு - எதிர்க்கட்சிகள் அமளி

மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசியல் லாபத்துக்காக நாட்டு மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவறாக வழிநடத்தியதாகவும், இதனால் சர்வதேச அளவில் நாட்டின் மரியாதை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதற்காக அவையிலும், நாட்டு மக்களிடமும் ராகுல்காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த பிரச்சனையை கிளப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், துணை சபாநாயகர் அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைத்தார்.

ரஃபேல் விவகாரம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பா.ஜ.க. வரவேற்பு

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இந்த தீர்ப்பு அரசியலில் பொய்யை அவிழ்த்துவிட்டவர்களின் கன்னத்தில் விழுந்த அடி என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராகுல்காந்திக்கு இந்த குற்றச்சாட்டை சுமத்த எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.  காங்கிரஸ் கட்சியிடம் ஆதாரங்கள் இருந்தால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டியது தானே என்றும், நாடாளுமன்றத்தில் விவாத்துக்கு பின்னர் தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படும் எனவும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விவாதத்துக்கு தயாரா என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்