கட்டாய தனி நபர் விபத்துக் காப்பீடு : ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறை

15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டம் ஜனவரி 1- முதல் நடைமுறைக்கு வருகிறது.
கட்டாய தனி நபர் விபத்துக் காப்பீடு : ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறை
x
தற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து காப்பீட்டின்படி, வாகன உரிமையாளர் இறந்தால்,  இரு சக்கர வாகனம் என்றால் ஒரு லட்சம் ரூபாயும்,  நான்கு சக்கர வாகனம் என்றால் இரண்டு லட்சம் ரூபாயும் இழப்பீடாகக் கிடைக்கும். சாலை விபத்தில் இறந்தவரின் பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல், மிகக் குறைவாக இழப்பீடு தொகையாக இருப்பதால் அதை 15 லட்ச ரூபாயாக ஐஆர்டிஏஐ  கடந்த செப்டம்பரில் உயர்த்தியது.  

இந்த புதிய காப்பீடு நடைமுறை  2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தில், மூன்றாம் நபர் உயிரிழந்தாலோ அல்லது படுகாயம் அடைந்தாலோ, அவரின் குடும்பத்துக்கு, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து போதிய இழப்பீடு கிடைக்கும். ஆனால் வாகன உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தால் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து போதிய இழப்பீடு கிடைக்காது என்பதால் ஐஆர்டிஏஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்