காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதி ஆதரவு அளிப்பாரா...?
பதிவு : டிசம்பர் 11, 2018, 05:33 PM
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இழுபறி நீடிப்பதால் சுயேச்சை எம்எல்ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இறங்கியுள்ளன.

5 மாநில தேர்தல் முடிவுகளில் தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் தெளிவான முடிவுகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநில முடிவுகளில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. மாலை 5 மணிக்கு பிறகே, தெளிவான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் முன்னிலையில் உள்ளன. எனவே, வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்  தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதுபோல, மத்திய பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. 

ஏற்கனவே, தேர்தலுக்கு முன்பு மாயாவதியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காங்கிரஸ் நடத்தும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடும் நிபந்தனைகளை மாயாவதி விதிப்பார் எனவும் தெரிகிறது. மேலும், நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

50 views

தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.

130 views

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

365 views

பிற செய்திகள்

திருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி

திருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

1155 views

நிலவை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2

நிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

630 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

34 views

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய பெண் கைது

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

26 views

"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு

இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.

43 views

ப. சிதம்பரம் கைது வேதனை அளிக்கிறது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து

ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.