முகேஷ் அம்பானி மகளுக்கு டிச.12-ல் திருமணம்

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கும் தொழிலதிபர் அஜய்-யின் மகன் ஆனந்த் பைரமாலுக்கும் நாளை மறுதினம் திருமணம் நடைபெறுகிறது.
முகேஷ் அம்பானி மகளுக்கு டிச.12-ல் திருமணம்
x
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கும் தொழிலதிபர் அஜய்-யின் மகன் ஆனந்த் பைரமாலுக்கும் நாளை மறுதினம் திருமணம் நடைபெறுகிறது. மும்பையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. திருமணத்தை ஒட்டி, கடந்த ஒருவாரமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பொதுமக்களுக்கு விருந்து நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் களை கட்டின. இதில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் ஸ்டார் சாருஹான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்