அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : முக்கிய இடைத்தரகர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்
பதிவு : டிசம்பர் 05, 2018, 07:36 AM
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை துபாய் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.
* ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை துபாய் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. டெல்லி சிபிஐ தலைமையகத்தில் அவரிடம்  அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து  12  ஹெலிகாப்டர்களை வாங்க 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள சிலருக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது.  இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு  இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

* இது தொடர்பாக பலர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றது.  இந்நிலையில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.  அவரை நாடு கடத்துவதற்கு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

* இதையடுத்து  விமானம் மூலம் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டார்.  இதனால் ஊழலில் தொடர்புடைய சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

5 மாநில பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நாளை காலை 8 தொடங்குகிறது.

8 views

பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் : காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகளுக்கு ராகுல் கடிதம்

பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் : காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகளுக்கு ராகுல் கடிதம்

5 views

சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி

சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி

7 views

கேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

235 views

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி 'தர்மசபா' கூட்டம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

25 views

தாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்

மகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

1790 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.