வருமான வரித் தாக்கல் 50 சதவீதம் அதிகரிப்பு - சுஷில் சந்திரா
பதிவு : டிசம்பர் 04, 2018, 04:35 PM
வருமான வரித் தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.
வருமான வரித் தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியுள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 6.08 கோடி வருமான வரித் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் அதிகமாகும். புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சர்வதேச வரி தொடர்பான கருத்தரங்கில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பெரு நிறுவனங்களின் வரித் தாக்கல் 8 லட்சமாக அதிகரித்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை65 சதவீதம் அதிகரித்துள்ளது.  நடப்பாண்டில் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட நேரடி வரி வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் வரித்தாக்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும்சுஷில் சந்திரா கூறினார்.

பிற செய்திகள்

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து

கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.

74 views

தேரோட்டம் - அமைச்சர், பக்தர்கள் பங்கேற்பு

கரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.

7 views

காங்கிரஸ் பிரமுகரின் வாகனம் திருட்டு : சி.சி.டி.வி.-யில் பதிவான காட்சிகள்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

20 views

இன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.

31 views

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

12 views

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3 பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.