பாஜக எம்.எல்.ஏ-வுக்கு செருப்பு மாலை : வாக்குசேகரிக்க சென்றபோது இளைஞர் எதிர்ப்பு

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் வரும் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
பாஜக எம்.எல்.ஏ-வுக்கு செருப்பு மாலை : வாக்குசேகரிக்க சென்றபோது இளைஞர் எதிர்ப்பு
x
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் வரும் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், நகாடா மாவட்டம் காச்ரோட் பகுதியில், அந்த தொகுதியின் எம்எல்ஏ-வும் பாஜக வேட்பாளருமான திலீப் செகாவத் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கட்சியினர் மாலையிட்டு வரவேற்றபோது, இளைஞர் ஒருவர் திடீரென புகுந்து, எம்எல்ஏ செகாவத்துக்கு செருப்பு மாலையை அணிவித்தார்.  இதனால், அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பாஜக எம்எல்ஏ செகாவத், செருப்பு மாலையை கழற்றி எறிந்ததோடு, இந்த இளைஞரை சரமாரியாக தாக்கினார். 

Next Story

மேலும் செய்திகள்