ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.
ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு  கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று புஷ்பயாகம் நடத்துவது வழக்கம். புஷ்பயாகத்தை முன்னிட்டு இன்று காலை பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் புஷ்ப யாகத்திற்காக 9 டன் மலர்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். காலை 9 மணி முதல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வந்து ஜீயர்கள் முன்னிலையில்  திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி,  துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களை கொண்டு சுவாமி உற்சவருக்கு புஷ்பயாகம் நடத்தப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டது. உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய இடத்தில் தரையில் இருந்து உற்சவர்களின் மார்பு பகுதி வரை மலர்களை நிரப்பி 20 முறை புஷ்ப யாகம் நடத்தபட்டது. புஷ்பயாகத்தை முன்னிட்டு சுப்ரபாதம் , சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகள் தவிர மற்ற அனைத்து  கட்டண சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்