ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜினாமா

Flipkart நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜினாமா
x
சமீபத்தில் Flipkart நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கிய நிலையில், பின்னி பன்சாலுக்கும் வால்மார்ட் நிறுவனத்திற்கும் பனிப்போர் நிலவியதாக கூறப்படுகிறது. அவர் மீது முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக வால்மார்ட் விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதியாகவில்லை. இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக பின்னி பன்சால் கடிதம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்