கடந்த 2014 முதல் 3 மத்திய அமைச்சர்கள் மரணம்

கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 3 மத்திய அமைச்சர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2014 முதல் 3 மத்திய அமைச்சர்கள் மரணம்
x
கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 3 மத்திய அமைச்சர்கள் உயிரிழந்துள்ளனர். 2014ஆம் ஆண்டு மே மாதம் மோடி பிரதமராக பதவியேற்ற சில தினங்களில் டெல்லியில் நிகழ்ந்த வாகன விபத்தில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே உயிரிழந்தார். இதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தேவ், மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், புற்றுநோய் பாதிப்பு காரணமாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், இன்று உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்