ஷாஜியின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு - உயர்நீதிமன்றம்

தேர்தல் சமயத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ ஷாஜியின் பதவியை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக பறித்துள்ளது.
ஷாஜியின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு - உயர்நீதிமன்றம்
x
நிகேஷ்குமாருக்கு வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரூபாயை ஷாஜி வழங்க வேண்டும் எனவும், அழீக்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு ஆண்டுகளுக்கு ஷாஜி போட்டியிடக்கூடாது எனவும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஷாஜி தரப்பு அவகாசம் கோரியதை தொடர்ந்து தீர்ப்பை அமல்படுத்த 2 வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்