11,802 சடலங்களை மீட்ட பஞ்சாப் விவசாயி..!

ஆயிரக்கணக்கானோரை காப்பாற்றிய பஞ்சாப் விவசாயி, சாலை விபத்தால் முடங்கிப்போய் உதவியை எதிர்பார்த்துள்ள நிகழ்வை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
11,802 சடலங்களை மீட்ட பஞ்சாப் விவசாயி..!
x
கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில், மூன்று பேர் ஆழமான குளத்தில் மூழ்கி, உயிரிழந்து விட்டனர். அவர்களது குடும்பத்தினர் பரிதவிக்க, சடலங்களை மீட்க முடியவில்லை. மீட்க வந்த சிலரோ, 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இக்கட்டான சூழலில், ஆபத்பாந்தவனாக வந்தார் pargat singh. உயிரைப் பணயம் வைத்து, சடலங்களை மீட்டவர், ஒரு பைசா கூட வாங்கவில்லை. உயிரிழந்தவர்களின் ஏழ்மை நிலையைப் பார்த்துவிட்டு, 'பணமே வேண்டாம்' எனக் கூறி, வீறு நடை போட்டார் அந்த பஞ்சாப் சிங். கொடூர கொலை, தற்கொலை, விபத்தால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தூக்குவதற்கு, உறவினர்களே வர மாட்டார்கள். வீட்டிற்கு கொண்டு செல்லாமல், நேராக மயானத்திற்கு கொண்டு போகிறவர்களும் உண்டு. 

ஆனால், இந்த சடலங்களை எப்பேர்ப்பட்ட இடமாக இருந்தாலும் உயிரை பணயம் வைத்து மீட்கிறார், ஹரியானாவைச் சேர்ந்த பர்கத் சிங். 41 வயதாகும் இவர், 10 பசுக்களை வைத்துக்கொண்டு, பால் விற்று வருகிறார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கிவரும் உதவியையும் செய்து வருகிறார். இந்த இரண்டு மாநிலங்களில் எங்கு உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும் காவல்துறையினர், அழைப்பது இவரைத் தான். உதவி என்று யார் கூப்பிட்டாலும் உடனே சென்றுவிடுவார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, இலவசமாகவே, இந்த உதவியைச் செய்துவருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11 ஆயிரத்து 802 சடலங்களை மீட்டுள்ளார். பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆயிரத்து 650க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியுள்ளார். மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் காப்பாற்றியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்