"பகலில் பெண்கள் நைட்டி அணிய தடை" - மீறினால் ரூ.2000 அபராதம்

ஆந்திரா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் பகல் நேரங்களில் பெண்கள் நைட்டி அணிய பஞ்சாயத்து நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பகலில் பெண்கள் நைட்டி அணிய தடை - மீறினால் ரூ.2000 அபராதம்
x
மேற்கு கோதாவரி மாவட்டம் தேக்கலப்பள்ளி கிராமத்தில் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பெரியவர்கள் 
வழங்கிய இந்த உத்தரவு மூலம்,  பெண்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நைட்டி அணிபவர்கள் குறித்து ஊர் பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்தால் 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறக்கூடிய அபராத தொகையை கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என தண்டோரா அடித்து பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்