சபரிமலை கோவில் 18 ஆம் படி அருகே சென்ற பெண் பக்தர்

சபரிமலை அய்யப்பன் கோவில் 18 ஆம் படி அருகே வர முயன்ற பெண் பக்தரை, அங்கிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி முற்றுகையிட்டதால் பரபரப்பு உருவானது.
சபரிமலை கோவில் 18 ஆம் படி அருகே சென்ற பெண் பக்தர்
x
திருவிதாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 
நேற்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் 18 ஆம் படி வழியாக சென்று அய்யப்பனை தரிசித்த நிலையில், அய்யப்பனை தரிசிக்க 18 ஆம் படிக்கு 100 அடி தொலைவு வரை வந்த பெண் பக்தர்களுக்கு எதிராக அங்கிருந்த ஆண் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு உருவானது. 

அந்த பெண் பக்தரை சன்னிதான காவல் நிலையத்திற்கு போலீசார் பத்திரமாக அழைத்து சென்றதுடன், பக்தர்களையும் அமைதிப்படுத்தினர். அந்த பெண் பக்தர்கள் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் அவர்கள் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சாமியை தரிசனம் செய்து திரும்பினர். 

இந்த சம்பவங்களை படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் ஒருவர் சாளரத்தில் ஏறிய நிலையில் அவரை கீழே இறங்க பக்தர்கள் கட்டாயப்படுத்தியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஒளிப்பதிவாளர் போலீசார் பாதுகாப்புடன் கீழே இறங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்