நாளை மறுநாள் சபரிமலை நடைதிறப்பு
பதிவு : நவம்பர் 03, 2018, 11:28 AM
சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜைகளுக்குப் பின்னர் கடந்த 22-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராமவர்மாவின் பிறந்தநாள் வரும் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடைசி மன்னரின் பிறந்தநாளையொட்டி வருடம்தோறும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 6ம் தேதி இரவு நடை சாத்தப்படுகிறது. இதனையடுத்து 2 ஆயிரம் போலீசார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  வழக்கமாக மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டும்தான் அதிகளவில் போலீசார் குவிக்கப்படுவார்கள். ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று நீதிமற்ற தீர்ப்புக்கு பிறகு, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக முதன் முறையாக குறுகிய கால நடைதிறப்புக்கு அதிக எண்ணிக்கையில் போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் நவ. 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

266 views

"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்" - நடிகர் சிவகுமார்

சபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

1719 views

சபரிமலை கூட்ட நெரிசலை சமாளிக்க திட்டம் - நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

ஐயப்பனை தரிசிக்க, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

170 views

பிற செய்திகள்

இன்று முதல் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

375 views

"மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது" - பார்வையாளர்கள் கருத்து

தந்தி டிவியின் சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மக்கள் மன்றம் நிகழ்ச்சி..

22 views

திருடு போன 217 செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடர்களால் திருடப்பட்ட 217 செல்போன்களை மீட்ட போலீசார்..

155 views

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

591 views

"புயல் அடித்தது முதல் பச்சை குழந்தைக்கு பால் இல்லை"- புயலால் பாதிக்கப்பட்டவர்

கஜா புயலால்,வேளாங்கண்ணி சுற்றியுள்ள,கைகாட்டி, பி.ஆர்.புரம், பூவைத்தேடி உள்ளிட்ட எட்டு வீடுகளை இழந்து 8 கிராம மக்கள் தங்குவதற்கு முகாம்கள் இல்லை என புகார்..

182 views

கஜா புயல் : தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.