15 நாள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பம்..
பதிவு : அக்டோபர் 24, 2018, 06:20 PM
சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசி 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
* சொத்து வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார் இளவரசி. இதில் 2 வருடங்கள் முடிந்த நிலையில் இளவரசி தரப்பில் இருந்து தற்போது முதல்முறையாக பரோல் கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

* உடல்நலக்குறைவால் தனது சகோதரர் அவதிப்பட்டு வருவதாகவும், அவரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என கோரி 15 நாட்கள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட கர்நாடக சிறைத்துறை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இளவரசி கூறிய காரணம் உண்மைதானா என்பது குறித்து தமிழக காவல்துறைக்கு தகவல் அனுப்பி அது உறுதியான பிறகே பரோல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.