சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவிற்கு கட்டாய விடுப்பு

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுடனான அதிகார மோதல் காரணமாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவிற்கு கட்டாய விடுப்பு
x
பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியிடம் இருந்து, லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்ய, இயக்குனர் அலோக் வர்மா உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ சிறப்பு பிரிவு டி.எஸ்.பி தேவேந்திர குமாரும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. 

இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து இரு இயக்குனர்களையும் அழைத்து பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் திரும்பி வரும் வரை தற்போது துணை இயக்குனராக உள்ள நாகேஷ்வர ராவ், இயக்குனர் பொறுப்புகளை கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்