பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு - உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மருத்துவ இடம் ஒதுக்காததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு  ரூ.1 லட்சம் இழப்பீடு - உயர் நீதிமன்றம் உத்தரவு
x
2018-19ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் 156 மதிப்பெண்கள் பெற்ற மிதுனா, புதுச்சேரி அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெறுவதற்காக விண்ணப்பித்தார். ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்காக 16 லட்ச ரூபாய் கட்டணத்தை வரைவோலையாக சென்டாக் அமைப்புக்கு செலுத்திய நிலையில், தரவரிசை பட்டியலில் மிதுனா 95வது இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் மிதுனாவுக்கு இடம் ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  மிதுனா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், மாணவி மிதுனாவின் வழக்கை கருத்தில் கொண்டு ஒரு இடத்தை நிரப்பாமல் வைக்க இடைக்கால உத்தரவிட்டார். அதனை கருத்தில் கொள்ளாத கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை செய்த நீதிபதி, அடுத்த கல்வி ஆண்டு மருத்துவ சேர்க்கையில் மிதுனாவுக்கு இடமளிக்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்திய கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 5 இடங்களை, கல்லூரி நிரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்