முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என உறுதி செய்தார் பிரதமர் நரேந்திரமோடி - அமித்ஷா

முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என உறுதி செய்தார் பிரதமர் நரேந்திரமோடி - அமித்ஷா
x
மத்திய பிரதேச மாநிலம் சாட்னா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் முத்தலாக் போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் கிடையாது என்றார். பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் பாஜக முன்னிலை வகிப்பதாக கூறியஅமித்ஷா, மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் நிர்மலா சீதாராமன் என உயரிய பொறுப்புகளில் அமைச்சர்கள் இருப்பதாகவும் மத்திய அமைச்சரவையில் மட்டும் 9 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்