விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை தடுத்தவர் கே.சி.ஆர் - பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு

தெலங்கானா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவதற்கு, பிரதமர் மோடியை பார்த்து, சந்திரசேகர ராவ் பயந்து விட்டதே காரணம் என்று, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை தடுத்தவர் கே.சி.ஆர் - பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு
x
கரீம்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா,  ஒவ்வொரு விவசாயிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யும் பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையை, சந்திரசேகர ராவ் நிராகரித்து விட்டதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார். அதற்கு காரணம் பா.ஜ.க. மீதான பயம் என்றும், இஸ்லாமிய வாக்கு வங்கிக்கு சந்திரசேகர ராவ் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தலைமையில் எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரசேகர ராவ் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு மாற்று இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்து உள்ளார். முன்னதாக பா.ஜ.க. ஊழியர் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, 23 வழிமுறைகளை பின்பற்றினால், தெலங்கானாவில் பா.ஜ.க.  ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்