சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும் - கேரள பொது பணித்துறை செயலர் கமலவரதன் ராவ் தகவல்

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, கேரள மாநில பொதுப்பணித்துறை செயலாளர் கமலவரதன் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும் - கேரள பொது பணித்துறை  செயலர் கமலவரதன் ராவ் தகவல்
x
கேரள மாநில பொது பணித்துறை  செயலாளர் கமலவரதன் ராவ் தலைமையில் திருவிதாங்கூர் ஐயப்பன் கோயில் அறநிலைய துறை செயலாளர் ஜோதி லால்,  கேரள மாநில கூடுதல் டிஜிபி அனந்தகிருஷ்ணன் ஆகியோர்  இன்று திருப்பதிக்கு வந்தனர். பின்னர், விருந்தினர் மாளிகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயலாளர்   சீனிவாசராஜுவுடன்  அனைவரும் ஆலோசனை நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலவரதன் ராவ், திருப்பதி ஏழுமலையான் கோவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு செய்து தரும்  ஏற்பாடுகள், வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார். 10 முதல் 50 வயதுக்கு  உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களை திரும்பி செல்லுமாறு கூற இயலாது என்றும், தேவையான வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்