'கள்ள தொடர்பு தவறில்லை' என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ?

கள்ள உறவு தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியதா? இந்த தீர்ப்பை பற்றிய தகவல்கள்.
கள்ள தொடர்பு தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ?
x
* 'கள்ளத் தொடர்பு தவறில்லை' என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டு விட்டதாக வெளியான தகவலால் பலரும் சமூக வலை தளங்களில் புகுந்து விளையாடி விட்டனர்.
 
* உண்மையில் 'கள்ள தொடர்பு தவறில்லை' என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ? சட்டப் பிரிவு 497-யை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது தான் உண்மை.

* ஆண்களை மட்டுமே குற்றவாளியாக கருதும் இந்த சட்டத்தை, தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு என்பதால், அதனை நீக்குவதாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவித்தது. இதில், எந்த இடத்திலும் கள்ள உறவு தவறில்லை என்றோ, எந்த ஆணும், எந்த பெண்ணுடனும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றோ உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. 

*காலத்தால் பழமையான சட்டப் பிரிவுகளை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை உருவாக்குவது இயல்பான ஒன்று. அந்த வகையில், சட்டப்பிரிவு-497 நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய சட்டப்பிரிவை இயற்றுவது மத்திய அரசின் கையில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்