வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த இளைஞர் கைது

வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த இளைஞரை கேரள போலீசார் கைது செய்தனர்.
வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த இளைஞர் கைது
x
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அகழி வனப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றிதிரிந்த டேனிஷ் என்ற இளைஞரை விசாரித்த போது அவர், மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்தது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். கோவை மாவட்டம் புளியகுளம் பகுதியை சேர்ந்த இவர், தமிழக கேரள எல்லையில் கொரில்லா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு - புதிதாக பொறுப்பேற்ற கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா பேட்டி

தமிழக கேரளா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சீராக உள்ளதாகவும் புதிதாக பொறுப்பேற்ற கொண்ட கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா தெரிவித்துள்ளார்.  அனைத்து இடங்களிலும் பொது மக்கள் உதவியுடன் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எல்லை சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஐ.ஜியாக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்