பெங்களூருவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 156 மி.மீ. மழை பதிவு

பெங்களூருவில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பெங்களூருவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 156 மி.மீ. மழை பதிவு
x
கனமழையால், பெங்களூருவின் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பன்னார்கட்டா சாலை, பெங்களூரு, மைசூர் சாலையில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹல்லி பகுதியில் மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் வெள்ளநீர் தேங்கி இருந்தது. அந்த வழியாக சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்வர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் பெங்களூரு- மைசூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 156 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்