"பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஆதரிக்க கூடாது" - சுஷ்மா ஸ்வராஜ்

பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஊக்குவிக்க கூடாது என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஆதரிக்க கூடாது -  சுஷ்மா ஸ்வராஜ்
x
ஐ.நா.பொதுச்சபையின்73- வது கூட்டம் 25-ம் தேதி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறினார். இந்திய அரசாங்கம் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கெளரவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் காந்தியடிகளும், மண்டேலாவும் அமைதி வழியில் பொதுமக்கள் விடுதலைக்காக  போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்த அமைச்சர் சுஷ்மா, எந்த வகையிலும்  தீவிரவாத்தை ஆதரிக்க கூடாது என்றும் குறிப்பிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாத்தை வேரறுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மாநாட்டின் இடையே ஆஸ்திரேலியா,கொலம்பியா, ஈகுவேட்டர், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளின்  வெளியுறவு அமைச்சர்களையும் சுஷ்மா சந்தித்து பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்