நிதி நெருக்கடியில் குஜராத் புல்லட் ரயில் திட்டம்..!

நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுத்தியுள்ளதால் இந்தியாவின் கனவுத்திட்டமான புல்லட் ரயில் திட்டம் குறித்த காலக்கெடுவுக்குள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிதி நெருக்கடியில் குஜராத் புல்லட் ரயில் திட்டம்..!
x
2017 செப்டம்பர் மாதம் அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் திட்ட துவக்க விழா நடைபெற்றது. குஜராத் புல்லட் ரயில் திட்டத்தை  செயல்படுத்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்டது. திட்டத்திற்கான மொத்த தொகையில் 88 ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தரும் என ஜப்பான் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. 

இத்திட்டத்துக்காக மொத்தம் ஆயிரத்து 400 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என்ற நிலையில் அதில் ஒரு சதவீதத்திற்கு குறைவான நிலமே தற்போது வரை கையப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் ஜப்பான் அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் தங்கள் எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். 

இத்திட்டத்தின் தொடக்க விழாவின் போது 125 கோடி ரூபாயை முதல் தவணையாக கொடுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அதன் பிறகு நிதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகளின் தொடர் போராட்டமே காரணம் என சொல்லப்படுகிறது. விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜப்பான் நிதி நிறுவனம்  ஆலோசனை வழங்கியுள்ளதாகச் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதி பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்,  அத்திட்டம் செயல் வடிவம் பெறுவதில் மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்