50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டம்.!

பிரதமரின் ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டம்.!
x
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தல்சீர் பகுதியில் அமையவுள்ள உரத் தொழிசாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார். ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் நாளை முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் 5 லட்ச ரூபாய் மதிப்பில் 50 கோடி ஏழை  மக்கள் மருத்துவ காப்பீடு பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். 

இந்த திட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் இணைந்துள்ளதாக தெரிவித்த  பிரதமர், ஒடிசாவும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள உரத்தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்றும், இதன்மூலம் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பசியோடு யாரும் படுக்கைக்கு செல்லக்கூடாது என்பதற்காக ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக ஒடிசா அரசுக்கு 450 கோடி ரூபாய் மானியமாக அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் நலத்திட்டங்களையும் மோடி பட்டியலிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்