55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து..!

மத்திய அரசு இரண்டாவது கட்டமாக எடுத்த நடவடிக்கை மூலம் 55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து..!
x
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி நிதி முறைகேடு சட்டவிரோத செயல்களுக்கு நிதி அளிப்பது போதைப் பொருள் கடத்தல் போன்றவை தொழில் துறை நிறுவனங்களின் பெயரில் நடைபெறுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார். 

போலி நிறுவனங்களை அடையாளம் கண்டறிந்து முடக்கும் நடவடிக்கையின் முதல்கட்டமாக ஏற்கனவே 2 லட்சத்து 26 ஆயிரம் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டமாக 55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.பி.சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்