மண்டல பூஜைக்கு தயாராகிறது சபரி மலை...

பெரு வெள்ளத்தினால் நிலை குலைந்த சபரிமலையில், போர்க்கால அடிப்படையிலான சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மண்டல பூஜைக்கு தயாராகிறது சபரி மலை...
x
* இந்தியாவிலேயே, வேறு எங்கும் வழக்கத்தில் இல்லாத 'விரத யாத்திரை' எனும், ஆன்மீக பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயில் 'சபரிமலை ஐயப்பன் கோயில்'. 

* மேற்கு தொடர்ச்சி மலையில், அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை, பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய சிறப்புக்களை கொண்டுள்ளது. நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நிகழும் மண்டல பூஜையின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள், இங்கு வருகை தருகின்றனர். 

* கேரளாவில் பெய்த கன மழையால், சபரி மலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை நதியில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பக்தர்கள் செல்லும் பாலம் சேதமடைந்ததால், கடந்த திருவோண பண்டிகை மற்றும் மலையாள மாத முதல் நாள் பூஜைகளுக்கு, பக்தர்கள் செல்ல முடியவில்லை. கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டு, பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதித்தது. 

* இந்நிலையில், நீர் வரத்து குறைந்து, இயல்பு நிலை திரும்பியதால், கேரள அரசும், திருவிதாங்கூர் அறநிலையக் குழுவும், புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.  பம்பை நதிக்கரையில், இனிமேல் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என, அரசு அறிவித்துள்ளது. 

* கார்த்திகை மாதம், மண்டல பூஜை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில், புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. இந்த மாதம் 16ம் நாள் தொடங்கும் மாதாந்திர பூஜை, நவம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள மண்டல பூஜைக்கும் வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என்று, தேவசம்போர்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்