தேசிய அளவிலான பாலியல் குற்றவாளிகள் பதிவேடு வெளியீடு

பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தேசிய அளவிலான பதிவேட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேசிய அளவிலான பாலியல் குற்றவாளிகள் பதிவேடு வெளியீடு
x
கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் மாணவி நிருபயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து பாலியல் குற்றவாளிகள் தொடர்பாக தேசிய அளவிலான பதிவேடு ஒன்றை உருவாக்க ஐ​க்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. அந்த பதிவேடு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ள 4 லட்சத்து 40 ஆயிரம் குற்றவாளிகளின் பெயர்கள், படங்கள், முகவரி மற்றும் கைரேகைகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை புலனாய்வு அமைப்புகள் மட்டும் பயன்படுத்த முடியும் என்றும் குற்றவாளிகளின் தனிமனித ரகசியங்கள் தொடர்ந்து காப்பாற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய பதிவேடு கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 9-வது நாடாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்