ஏழுமலையான் கோயில் - விமர்சையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
ஏழுமலையான் கோயில் - விமர்சையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம்
x
கடந்த 13- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சேஷம், அன்னம், கருடன், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை, உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வாரின் வீதியுலா நடைபெற்றது. வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவைகளை  கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. 

பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்