மகள், மருமகனை ஓட ஓட விரட்டி வெட்டிய தந்தை...
பதிவு : செப்டம்பர் 20, 2018, 07:03 AM
மாற்றம் : செப்டம்பர் 20, 2018, 01:40 PM
காதல் திருமணம் செய்தவர்களை கொல்ல முயற்சி : மகள், மருமகனை ஓட ஓட விரட்டி வெட்டிய தந்தை..
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு,  எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த மாதவி என்பவர், எதிர்ப்பை மீறி, சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மாதவியின் தந்தை, இருவரையும்  நடு ரோட்டில் அரிவாளால் ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். தாக்குதலால் படுகாயமடைந்த மாதவியும், அவரது காதல் கணவரும், உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாதவியின் தந்தை மனோகரை தேடி வந்தனர் . 

இந்நிலையில்  மகளை கொல்ல முயற்சித்த தந்தை மனோகர், ஹைதராபாத் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.