விவசாயத்தில் மட்டும் மாதம் ஒரு லட்சம் வருவாய் ஈட்டும் எம்.எல்.ஏக்கள்...!
பதிவு : செப்டம்பர் 18, 2018, 04:15 PM
இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏக்களில் 24 சதவீதம் பேர் விவசாயிகள் என்றும் விவசாயத்தில் மட்டும் அவர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில், எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக ADR நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

* மொத்த எம்.எல்.ஏக்களில் 25 சதவீதம் பேர் தங்களை தொழிலதிபர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

* 24 சதவீத எம்.எல்.ஏ-க்கள், தாங்கள் விவசாயம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

* 13 சதவீத எம்.எல்.ஏக்கள் விவசாயம் மற்றும் வணிகம் இரண்டையும் சேர்த்து செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

* மேலும் 9 சதவீதம் பேர் அரசியல்வாதி என்பதையே தங்களது தொழிலாக குறிப்பிட்டுள்ளனர்.

* 4 சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே வழக்கறிஞர்கள். இதேபோல, 2 சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே மருத்துவர்களாக பணிபுரிகின்றனர். 

* முக்கியமாக சினிமாத்துறையில் இருந்து ஒரு சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

* அரசு அளிக்கும் சம்பளத்தை சேர்க்காமல், வெறும் விவசாயம் மட்டுமே செய்யும் எம்.எல்.ஏக்களின் மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது.

* இதில் விவசாய வருமானத்திற்கு வருமான வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் :

* இந்தியாவில், அதிக பணக்கார எம்.எல்.ஏ-க்கள் இருப்பது கர்நாடகாவில் தான் என்கிறது இந்த அறிக்கை. கர்நாடக எம்.எல்.ஏக்கள் சராசரியாக மாதம் 9 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

* பணக்கார எம்.எல்.ஏ-க்கள் உள்ள மாநிலங்கள் வரிசையில், தமிழகத்திற்கு 8வது இடம் கிடைத்துள்ளது.

* தமிழக எம்.எல்.ஏ ஒருவரின் சராசரி மாத வருமானம் மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய். இது தவிர, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு தனியாக சம்பளம் வழங்குகிறது. சமீபத்தில், அந்த தொகை 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மிகவும் குறைவான வருமான உடையவர்கள் சத்தீஸ்கர் எம்.எல்.ஏ-க்கள் தான். அவர்களுக்கு மாதம் 45,000 ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைக்கிறது.

பட்டதாரி எம்.எல்.ஏக்களை விட 8-வது படித்தவர்களுக்கு அதிக வருமானம்:

* 80 வயதை தாண்டிய எம்.எல்.ஏ-க்கள் ரூ 7 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகளாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய வருமானம், 8வது படித்த எம்.எல்.ஏ-க்களை விட குறைவு. 

* ஒரு பட்டதாரி எம்.எல்.ஏ மாதம் 1.6 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால், 8வது வரை படித்த எம்.எல்.ஏ அதிகபட்சமாக மாதத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். 

அரசியலில் பணி ஓய்வே கிடையாது என்பதும் இந்த ஆய்வின் மூலம் நிரூபணமாகிறது. சாமானிய ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள். ஆனால், 60 வயதிற்கு மேலான எம்.எல்.ஏ-க்களின் வருமானம், 2 லட்சத்தை தாண்டுகிறது.


தொடர்புடைய செய்திகள்

இந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் எவ்வளவு?...

இந்தியாவில் எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

520 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1669 views

ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை - 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதம்

ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

397 views

பண மழையை பொழிந்த காங்கிரஸ் தலைவர்...

குஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாகூர், பாடகர் மீது பணத்தை மழையாக அள்ளி வீசிய வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது....

923 views

பிற செய்திகள்

சபரிமலையில் 18 படிகளுக்கு சிறப்பு பூஜை

சபரிமலையில மற்ற பக்தர்கள் 18 படிகள் வழியே ஏறிச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

754 views

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சி : ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இன்று ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 10 பெண்கள் அடங்கிய குழுவினர் மலையேற முயற்சித்தனர்.

48 views

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார்.

35 views

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்

ரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.

132 views

மயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்?

சென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

2897 views

ஒடிசா : செயற்கை ஏரியில் கரைக்கப்பட்ட சிலைகள்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் சிலைகளை கரைக்க கவுகாய் மற்றும் தயா ஆற்றின் கரையில் 2 பெரிய செயற்கை ஏரிகளை அதிகாரிகள் அமைத்திருந்தனர்.

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.