பாஜக எம்.பி.யின் கால்களைக் கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்

பாஜக எம்.பி. நிசிகாந்த் துபேயின் கால்களை தொண்டர் ஒருவர் தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாஜக எம்.பி.யின் கால்களைக் கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்
x
ஜார்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், மேடையில் எம்.பி. இருந்தபோது, அக்கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்