"இந்தியா சுகாதார மையமாக திகழ்கிறது" - வெங்கய்யா நாயுடு பெருமிதம்

இந்தியா தற்போது சுகாதார மையமாக மாறியுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தியா சுகாதார மையமாக திகழ்கிறது - வெங்கய்யா நாயுடு பெருமிதம்
x
மால்டா தலைநகர் ஃப்ளோரினாவில் இந்திய வம்சாவளியினர் இடையே பேசிய வெங்கய்யா நாயுடு, பத்து கோடி குடும்பங்கள் பயன் அடையும் ஆயுஷ்மான் பாரத் என்ற பெரிய, சிறந்த ஆரோக்கிய பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட வருவதாக தெரிவித்தார். மேலும், பொருளாதார சீர்திருத்தத்தை வெகுவாக வரவேற்பதாகவும், மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையால் கருப்புப் பணம் கண்டறியப்பட்டு, தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதோடு, நாட்டின் மதிப்பும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியர்கள் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் வளர்ச்சி அடைவதுடன் தாய் நாட்டிற்கு புகழையும், பெருமையையும் தேடித்தருவதாகவும் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்