துப்பாக்கி சண்டை : உயிர் தப்பிய செய்தியாளர்கள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையின் போது, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் நடுவில் சிக்கி கொண்டனர்.
துப்பாக்கி சண்டை : உயிர் தப்பிய செய்தியாளர்கள்
x
எல்லையில் ஊடுருவல் : 3  தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு நகருக்கு அருகே, சர்வதேச எல்லையையொட்டிய காக்ரியா என்ற பகுதியில்  தீவிரவாதிகள் ஊடுருவிய தகவல் கிடைத்ததால், பாதுகாப்பு வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஆளில்லாத
விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் பாதுகாப்பு வீரர்கள் பயன்படுத்தினர். இரு வேறு இடங்களில் நிகழ்ந்த இந்த என்கவுண்டரில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும்,  பாதுகாப்பு வீரர்கள் 12 பேர் காயம் அடைந்ததாகவும்  உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து, ஆயுதங்கள் - வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய  துப்பாக்கி சண்டையின் போது, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் நடுவில் சிக்கி கொண்டனர். இரு தரப்பினரும் சரமாரியாக ஒருவர் மீது, மற்றொருவர் துப்பாக்கியால் சுட்ட போது, செய்தியாளர்கள், தரையில் படுத்து, உயிர் தப்பினர். போர் முனையில் நிகழ்ந்த மெய்சிலிர்க்கும் இந்த காட்சி,  பதை பதைக்க வைப்பதாக அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்