"திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயரால் வழங்கப்பட்ட நகைகள் எங்கே ?"

திருமலை திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராய மன்னரால், நகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயரால் வழங்கப்பட்ட நகைகள் எங்கே ?
x
ஆந்திராவை மையமாக கொண்டு ஆட்சி செய்த விஜயநகர பேரரசில், 16ம் நூற்றாண்டில் மன்னராக இருந்தவர்,  கிருஷ்ண தேவராயர். இவரது ஆட்சி காலத்தில், திருமலை திருப்பதி கோயிலுக்கு ஏராளமான நகைகளை நன்கொடையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது பற்றிய தகவல், கோயில் சுவர்களில், எழுதப்பட்டிருப்பது கடந்த 2011ம் ஆண்டு, ஐதராபாத் தொல்பொருள் ஆராய்ச்சி துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. ஆனால், கிருஷ்ண தேவராயரால் திருமலை கோயிலுக்கு நகைகள்  வழங்கப்பட்ட தகவல் எதுவும் இடம் பெறவில்லை என, தேவஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சமூக ஆர்வலர் BKSR அய்யங்கார் என்பவர், மத்திய தகவல் ஆணையத்திடம், கிருஷ்ண தேவராயரால் வழங்கப்பட்ட நகைகள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். இதையடுத்து, இது பற்றிய தகவல்களை தருமாறு மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம், ஆந்திர கலை பண்பாட்டு துறை மற்றும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றிடம்  மத்திய தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்