5 சமூக நல ஆர்வலர்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பா ? - போலீசார் விளக்கம்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்கள் எவ்வாறெல்லாம் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான தகவல்களை மகாராஷ்டிர போலீசார் வெளியிட்டுள்ளனர்.
5 சமூக நல ஆர்வலர்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பா ? - போலீசார் விளக்கம்
x
சமூக நல ஆர்வலரும்,  வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரகாஷ் என்பவருடன் தொடர்ந்து இமெயில் வழியாக தொடர்பில் இருந்ததாகவும், தனது மகனின் மருத்துவ செலவு மற்றும் கல்லூரி மாணவர்களை சத்தீஸ்கருக்கு அனுப்ப நிதி கேட்டதாகவும் மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்துள்ளனர். 

கவுதம் நவ்லகா என்பவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், மக்களின் போராட்டங்களை அரசுக்கு எதிராக திசை திருப்புவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வரவர ராவ் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆயுதங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் மகாராஷ்டிர போலீசார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து ராஜீவ் காந்தி கொலை போல மீண்டும் நடத்த திட்ட மிட்ட இருந்தது தெரிய வந்ததாக மகாராஷ்டிரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யான தகவல்கள் என்றும் தனக்கு மாவோயிஸ்ட் இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சுதா பரத்வாஜ் விளக்கமளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்