பண மதிப்பிழப்பு : 99.3% நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது...

புழக்கத்தில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 99 புள்ளி 30 சதவீதம் திரும்ப வரப்பெற்றதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு : 99.3% நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது...
x
கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில், முதலீடு மற்றும் கட்டுமானத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டதாகவும், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் குறைந்ததாகவும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

15 புள்ளி 42 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்த உயர் ரூபாய் நோட்டுகளில், அரசின் அறிவிப்புக்கு பின்னர் 15 புள்ளி 31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வங்கி கணக்கில் வரப்பெற்றுள்ளது. 

11 ஆயிரம் கோடி மதிப்பிலான உயர் மதிப்பு நோட்டுகள் மட்டுமே திரும்பவரவில்லை என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கணக்குப் படி, ரூபாய் நோட்டுகள் புழக்கம் 37 புள்ளி 7 சதவீதம் அதிகரித்து 18 லட்சத்து மூவாயிரத்து 700 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்