பீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ராம்நாத் கோவிந்த்

பீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ராம்நாத் கோவிந்த்
x
பீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பீஹார் மாநில ஆளுநராக லால்ஜி டான்டன்  பணியாற்றுவார் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இதன்படி, 
* ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டு உள்ளார். 
* லால்ஜி டான்டன்    -   பீஹார் மாநில ஆளுநராகவும், 
* கங்கா பிரசாத்         - சிக்கிம் மாநில ஆளுநராகவும் பணியாற்றுவார்கள்.

மேகாலயா ஆளுநராக ததகட்டா ராய்யும், திரிபுரா மாநில ஆளுநராக கே.எஸ். சோலங்கியும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஹரியானா மாநில ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா பணியாற்றுவார். இதேபோல,  உத்தரகாண்ட் மாநில ஆளுநராக பேபி ராணி மவுரியா  நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒரே நேரத்தில், 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்