பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி இடம் மாற்றம் என தகவல் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடும் எதிர்ப்பு

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியை இந்தாண்டு லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி இடம் மாற்றம் என தகவல் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடும் எதிர்ப்பு
x
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியை, இந்தாண்டு லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, விமான கண்காட்சி நடத்த தேவையான அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ள பெங்களூரு தான் விமான கண்காட்சி நடத்த சரியான இடம் என்றும், மத்திய அரசு ஏன் இத்தகைய முடிவுகள் எடுத்துள்ளது என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்